×

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பொங்கல் விழா அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை, ஏப். 11: அருப்புக்கோட்டையில் முத்துமாரியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து விடிய, விடிய நேர்த்திக்கடன்
செலுத்தினர். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8ம் நாள் திருவிழாவாக பொங்கல் விழாவும், 9ம் நாள் திருவிழாவாக அக்கினிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 21, 51, 101 அக்னிச்சட்டிகள் எடுத்து ஊர்வலமாக வந்து விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர்.  ஆயிரங்கண் பானை, பாதம், கை உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ‘ஆகோ, அய்யாகோ’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் சென்றனர். நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பொதுநல அமைப்பினர் நீர்மோர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில், உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர். அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.

Tags : festival ,Aruppukkottai Muthuramaniyaman Pongal ,devotees ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்