×

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் கிராமங்களில் டீ, காபி, பலகாரங்கள் விற்பனை அமோகம் வியாபாரிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர்,ஏப்.11:  பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் கிராமங்களில்  மூன்று  மணி நேரம் மட்டுமே இயங்கிய டீ கடைகள் தற்போது 12 மணிநேரம் இயங்குவதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் கிரமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிகப்படியான வாக்காளர்கள் கிராமபகுதியில் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் கிராமத்தை நோகி தங்களது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.இதனால் கிராமங்களில் டீ, காபி அமோகமாக விற்பனையாகிறது. அதிக அளவில். குறிப்பாக கிராமங்களில் சின்ன சின்ன டீ கடைகள் இயங்கும். இந்த கடைகளில் காலை 5 மணி முதல் 7 மணி வரை இயங்கும். அதன் பிறகு இந்த  கடைகளுக்கு யாரும் வரமாட்டார்கள். இதனால் இந்த கடைகள் பகல் நேரத்தில் வெறிச்சோடி கிடக்கும்.
இந்நிலையில் தற்போது வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் கிராமங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக தேர்வு செய்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் வேட்பாளர்கள் சென்ற பிறகு கட்சி நிர்வாகிகள் தினசரி வாக்காளர்களை சந்தித்து பிரசாரத்தை வேகப்படுத்தி வருகின்றனர். அப்போது தொண்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டீ மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கப்படுகிறது. எந்த இடத்திற்கு வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து போனில் டீ கடைகாரர்களிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர் எத்தனை டீ அல்லது காபி அல்லது பால் என்று கேட்டு தேவையானவற்றை தயார் செய்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்து விடுகிறார்.மாலை ஆனவுடன் மொத்தமாக நிர்வாகிகள் கணக்கு பார்த்து பணம் கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதே போல் அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பிரசாரத்தில் ஈடுபடுவதால் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால் காலை 3 மணி நேரம் மட்டும் இயங்கும் டீ கடைகள் தற்போது 12 மணி நேரம் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் டீ, காபி, பலகாரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடைகாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : campaign campaigns ,bakeries ,villages ,
× RELATED அனைத்து பேருந்துகளும்...