×

புள்ளம்பாடி, லால்குடி ஒன்றிய கிராமங்களில் அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பு பெண்கள் மலர்துாவி வரவேற்பு

திருச்சி,ஏப்.11: அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் மலர்துாவி வரவேற்றனர்.பெரம்பலுார் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியங்களில் 2 நாட்களில் 65 ஊராட்சி, 3 பேரூராட்சிகளில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புள்ளம்பாடி ஒன்றியத்தில் பி.கே.அகரம், நெய்குளம், சிறுகளம்பூர், அழுந்தலையூர், மால்வாய், கல்லகம், முதுவத்துார், கல்லக்குடி, காணக்கிளிய நல்லுார், பெருவளப்பூர், வடுகர்பேட்டை, கோவண்டகுறிச்சி, விரகானுார், ஆலம்படி, வெங்கடாசலபுரம், புள்ளம்பாடி, சங்கேந்தி, வெள்ளனுார், ரெட்டிமாங்குடி, குமளூர், கண்ணாக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சவரிமுத்து, மாவட்ட இணை செயலாளர் இந்திராணி ஜெயபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, சிறுபான்மை பிரிவு சின்னையன் சௌக்கத் அலி, தகவல் தொழில் நுட்ப பிரிவு தினேஷ் ராஜா மற்றும் குமளூர் ராஜேந்திரன், பழனிசெல்வம் ஆகியோர் உடன் சென்றனர்.லால்குடி ஒன்றியத்தில் தாளக்குடியில் தொடங்கி அப்பாதுரை, எசனைகோரை, டி.வளவனுார், திருமணமேடு, இடையாற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், மணக்கால், கொப்பாவளி, கீழஅன்பில், கே.வி.பேட்டை, மாங்குடி, நத்தம், செம்பரை, திண்ணியம், கோமாகுடி, பெருவளநல்லுார், தச்சாங்குறிச்சி, மாடக்குடி, மருதுார் நகர், திருமங்கலம், பூவாளூர் பேரூராட்சி, லால்குடி பேரூராட்சி, பம்பரம்சுத்தி, வாளாடி ஆகிய ஊர்களில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வேட்பாளருடன் லால்குடி ஒன்றிய செயலாளர் விஜயமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் தர்மதுரை, மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ராமு, எம்ஜிஆர் மன்ற செயலாளர் தர்ம ராஜ், மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் கணேஷ்பாபு, வழக்கறிஞர் பிரகலாதன் உள்ளி ட்டோர் சென்றனர்.வேட்பாளர் ராஜசேகரன் செல்லுகின்ற இடங்களில் ெபண்கள் ஆரத்தி எடுத்தும் , மலர் துாவியும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெரும்பாலான பெண்ள் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.


Tags : Rajasekaran ,villages ,Amethi ,
× RELATED அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனு..!!