×

மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர்,ஏப்.11: மக்களவை தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனா ளிகளின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளி வசதிகளுக்கானபார்வையாளர் சந்திரமோகன் கலெக்டருடன் சென்று நேரில்ஆய்வு செய்தார்.பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளின் வசதிக் காக வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள்குறித்து மாற்றுத் திற னாளி வசதிகளுக்கான தேர்தல்பார்வையாளர் சந்திரமோகன் நேற்று பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் நடத்தும்அலுவலரும், கலெக்டருமான சாந்தாவுடன் நேரில்சென்று ஆய்வுமேற்கொண்டார். இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோனேரிப்பாளையம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனை  ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி, எசனை அரசுமேல்நிலைப்பள்ளி, அரணாரை ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நொச்சியம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக ஏற்ப டுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான சாய்வுதளவசதி, குடிநீர்வசதி, வீல்சேர் வசதி உள்ளிட்டவைகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில்நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல்ஆணைய உத்தர வுகளை தெளிவுபடுத்திக்கூறினார்.
நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி, ஊரக வள ர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் சீனிவாசன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) ராஜராஜன், வருவாய்கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர்திட்ட இயக் குநர் தேவநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Facilities viewer ,polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...