×

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்களிக்க தகுதியானஆவண பட்டியல் வழங்கும் பணி துவக்கம்

பெரம்பலூர்,ஏப்.11: பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 652 வாக்குச்சாவடிகளிலும் பூத் சிலிப் வழங்கும்பணி தொடங்கியது. பூத் சிலிப்போடு வாக்களிக்கத் தகுதியான ஆவணப்பட்டியல் இணைத்து வழங்கப்படுகிறது.மக்களவை  தேர்தல் வருகிற 18ம்தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தேர்தல் நடத்தும்அலுவலரும், கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 332 வாக்குச்சாவடிகள், குன்னம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 320 வாக்குச்சாவடிகள் என 2சட்டமன்றத் தொகுதிகளில்உள்ள 652 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பும்பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 2,89,732வாக்காளர்கள், குன்னம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 2,62,876 வாக்காளர்கள் எனமொத்தம் 5,52,608 வாக்காளர்களுக்கு வழங்கவேண்டிய பூத் சிலிப்புகள் 652 பிஎல்ஏ எனப்படும் வாக்குச் சாவடி நிலைஅலுவலர்களால் வழங்கும்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் இந்தியத் தேர்தல்ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்காளர்கள் வாக் களிக்கத் தகுதியான ஆவணங்களான பாஸ்போர்ட், டிரைவிங்லைசென்ஸ், மத்திய, மாநிலஅரசின் பொதுத்துறைநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகை ப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், பான்கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண்அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மாகாந்தி தேசியஊரக வேலைஉறுதியளிப்புத் திட்ட பணிஅட்டை, தொழி லாளர்நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக்காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு, புகைப் படத்துடன்கூடிய ஓய்வூதியஆவணம், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாளஅட்டை, ஆதார்அடையாள அட்டை ஆகிய 11ஆவணங்கள் குறித்தப் பட்டியலை பின்புறம் இணைத்து வாக்காளர் களிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 11ஆவணங்கள் அடங் கிய பட்டியலை இணைத்து வாக்காளர்களுக்கு வழங்கிவருகின்றனர். இந்தப் பணிகள் 4 நாட்களில் முடிவடையும் என மாவட்டத் தேர்தல்நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : constituencies ,Kunnam Assembly ,Perambalur ,
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...