×

வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்கள் பொது பார்வையாளர் ஆய்வு

புதுக்கோட்டை, ஏப். 11:வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்களை  திருச்சி பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார்பார்வையிட்டார்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்களை   திருச்சி பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி பார்வையிட்டனர். பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான படிவங்கள், கையேடு, பேப்பர் பசை, டேகுகள்  உள்ளிட்ட  98 வகையான பொருட்கள் வரப்பெற்றது. இவைகள்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,537 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.  

இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக, தயார்நிலையில் உள்ளனவா என்பது குறித்து பார்வையிட்டனர்.  இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் (தேர்தல்) திருமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Viewer ,polling centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!