×

அவதியில் கிராமமக்கள் போவோமா சம்மர் டூர்... மதுரை அழகர் கோயிலுக்கு பூம்பூம் மாட்டுடன் பக்தர்கள் பயணம்

ராமநாதபுரம், ஏப்.11: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களிலிருந்து மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அழகர் கோயிலுக்கு பூம்பூம் மாட்டுடன் நேர்த்தி கடனை செலுத்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். சித்திரை மாதம் நடைபெறும் விழாவில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் காளை மாட்டை தானமாக வழங்குவதாக கிராம மக்கள் வேண்டி நேர்த்தி கடன் செலுத்துவார்கள். நேற்று ராமநாதபுரம் சக்கரகோட்டை கிராமத்திலிருந்து அழக்கோயிலுக்கு மேளதாளம் முழங்க பூம்பூம் மாட்டுடன் 10க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக சென்றனர்.

Tags : Travelers ,Madurai Azhar ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை