×

பச்சை தேயிலை வரத்து குறைவு

மஞ்சூர், ஏப்.11:குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்துள்ளதால் தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், கைகாட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, பிக்கட்டி, இத்தலார், மகாலிங்கா, மேற்குநாடு, நஞ்சநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலைகளும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.  இவர்கள் தங்களது தேயிலை தோட்டங்களில் இருந்து பறிக்கும் பச்சை தேயிலையை  தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகிறார்கள். இந்நிலையில் குந்தா பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கிய பனிப்பொழிவு ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. மேலும் கடந்த ஒரு மாதமாக சமவெளி பகுதிக்கு இணையாக வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வறட்சியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்துள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் நாளொன்றுக்கு 4ஆயிரம் முதல் 6ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு