×

மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் விண்ணப்ப வினியோகம்

கோவை, ஏப்.11: கோவை மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. முதல் நாளில் 170 விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. கோவை அடுத்த காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம்., பி.காம் (சி.ஏ)., பி.ஏ. பொருளாதாரம், பி.ஏ ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பி.ஏ சுற்றுலா மற்றும் டிராவல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட 7 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மொத்தம் 420 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.

முதல் நாளில் 170 விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.50, எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் காண்பித்து ரூ.2 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பிளஸ்2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு, பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வினியோகம் செய்யப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Government College ,Mettupalayam ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்