×

50 ஏக்கர் வனம் எரிந்து நாசம்

மஞ்சூர், ஏப்.11:  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி,கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மஞ்சூர் சுற்றுபுற வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் தீக்கிரையாகி வருவது அதிகரித்துள்ளது. மஞ்சூர் அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை மீக்கேரி வனப்பகுதியில்  நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. ஏற்கனவே, அப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கிடந்ததால் காட்டு தீ மள,மள வென பரவியது.

இதனால் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  சம்பவ இடத்திற்கு சென்ற குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.கேரள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ தமிழக வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க  தீ தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : land ,
× RELATED தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை...