×

பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூர், ஏப்.11: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, மகிஷாசூரமர்தனம், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கோயிலின் முக்கிய நிகழ்வான நேற்று  கோயில் வளாகத்தில் 60 அடி நீளமுள்ள குண்டத்தில் 15 நாள் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினார்.அந்தியூர், புதுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், முனியப்பன் பாளையம், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கையில் பிரம்பு வைத்துக்கொண்டு குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர் திருவிழா நடக்கிறது. 16ம் தேதி பாரிவேட்டையும், 17ம் தேதி வசந்தோற்சவத்துடன் பண்டிகை நிறைவடையும். நேற்று நடந்த குண்டம் திருவிழாவில் டவுட்டு பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சூர்யா தம்பதியினர் தங்கள் 3 மாத பெண் குழந்தைக்கு துலாபாரம் வழங்கினர்.  குழந்தையின் எடைக்கு ஏற்ப காசுகள் வைத்து சாமிக்கு காணிக்கை செலுத்தினர்.

Tags : Katham Festival ,Bhadrakaliyamman ,
× RELATED விலையுயர்ந்த பைக் வாங்குவதற்காக...