×

நாமக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன் சுயேட்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்

நாமக்கல், ஏப்.11: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இதற்காக  அரசு அலுவலர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள், காலை 9 மணிக்குள் வருமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், முக்கிய அரசியல் கட்சியினர் வராமல்,  சுயேட்சைகள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேஷ் என்பவர், ஆர்டிஓ அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாக்குச்சீட்டு பொருத்துவதற்கு காலை 9 மணிக்கு வரும்படி அதிகாரிகள் கூறினர். சுயேட்சை வேட்பாளர்கள் வந்த நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரவில்லை என்று கூறி எங்களை காக்க வைத்தனர். இதனால், 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், குறித்த நேரத்திற்கு பிரசாரத்திற்கு செல்ல முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால், தர்ணாவில் ஈடுபட்டேன்,’ என்றார்.

Tags : Independent ,candidate ,Dharna ,office ,Namakkal RTO ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்...