×

ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க தவறாமல் வாக்களிக்க வேண்டும்

ஓமலூர், ஏப்.11: ஓமலூரில் நடந்த திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், எம்பி திருச்சி சிவா கலந்து கொண்டு, சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து  பேசியதாவது:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது, தமிழக மக்களை பார்க்க வராத  மோடி, இப்போது தேர்தலுக்காக பல முறை வந்து செல்கிறார். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதாக கூறி, பண மதிப்பிழப்பை  ஏற்படுத்தி, மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கினார். டில்லியில் ஓராண்டாக போராடிய விவசாயிகளை திரும்பி பார்க்காத பிரதமர், இப்போது விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் தருகிறேன் என்கிறார். இந்தியாவில்  மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.  நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால், விளைநிலங்களை வேறு பணிக்கு மாற்றக் கூடாது என சட்டம் இயற்றப்படும்.  வாக்காளர்கள் தான் ஆட்சியாளர்களின் எஜமானர்கள். அதனால்,  அனைவரும் தவறாமல் வாக்களித்து, உங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்ய  வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எந்த விவரமும் தெரியாமல் உளறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து வேட்பாளர் பார்த்திபன் பேசுகையில்,  ‘சேலம் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய மேட்டூர் காவிரி உபரிநீர்  திட்டத்தை, முதல் பணியாக நிறைவேற்றுவோம். அதற்காக மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,’ என்றார்.

Tags :
× RELATED நீட் தேர்வு: உண்மையை மூடிமறைக்க...