×

கிருஷ்ணகிரியில் நாளை ராகுல்காந்தி பிரசாரம்

கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரியில் நாளை (12ம் தேதி) ராகுல்காந்தி பிரசாரம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி  நாளை (12ம் தேதி) பிரசாரம் செய்கிறார். அதற்கான மேடை அமைக்கும் பணி கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவராஜ் மகால் அருகில் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் வரும் ராகுல்காந்தி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் உள்ள ஹெலிபேட்டில் தரை இறங்கி, அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். அங்கு வேட்பாளர் டாக்டர்.செல்லகுமார், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா, தர்மபுரி நாடாளுமன்ற மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் பேட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி மற்றும் பொதுக்கூட்ட மேடை, அவர் காரில் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத், மாநில பொது செயலாளர்கள் தணிகாசலம், அருள்பெத்தய்யா, மாநில அமைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, திமுக முன்னாள் எம்பி சுகவனம், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் ஆறுமுகசுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Rahulkanthi ,campaign ,Krishnagiri ,
× RELATED வட கொரியாவுக்கு எதிராக எல்லையில்...