×

முலாம்பழம் கிலோ ₹25க்கு விற்பனை

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரி மார்க்கெட்டில் முலாம்பழம் கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கோடை வெயில் கொளுத்துவதால், உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் வரத்து மற்று பொதுமக்களிடையே நுகர்வும் அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து தர்மபுரி சந்தைப்பேட்டை மார்க்கெட்டிற்கு முலாம்பழம் அதிகரித்துள்ளது. இதனால், விலையும் சரிந்துள்ளது. கிலோ ₹25 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சந்தைப்பேட்டை வியாபாரிகள் கூறுகையில், வெயில் சுட்டெரித்து வருவதால், கடைகளில் முலாம்பழம் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், பழங்களை மொத்தமாக வாங்கிச் சென்று மக்களும் தங்களது வீடுகளில் ஜூஸ் தயாரித்து குடிக்கின்றனர். இதனால், முலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், வரிந்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
ஓசூரில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

ஓசூர், ஏப்.11: ஓசூர் சட்டமன்ற தொகுதி எஸ்.முதுகானபள்ளி, முகளூர், கோபனப்பள்ளி, மாசிநாயகனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாற்று கட்சியிலிருந்து விலகி, மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில், நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பிரகாஷ் எம்எல்ஏ பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி, ஓசூர் சட்டமன்ற பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சேகர்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் முனிராமையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, ராமு, ராமமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

Tags :
× RELATED காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்