மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பாலக்கோடு, ஏப்.11: பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பாலக்கோடு அருகே நம்மாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாக்கப்பன் இவரது மகன் சக்திவேல்(19). கூலி தொழிலாளி. இந்நிலையில் நேற்று 9ம் வகுப்பு பள்ளி மாணவி டியூசன் படித்து முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சக்திவேல் பள்ளி மாணவியை வழி மறித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அழு கொண்டே வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவம் குறித்து, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சக்திவேல் மீது, பஞ்சப்பள்ளி ேபாலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சக்திவேலை கைது செய்து, ராசிபுரம் சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: