×

தர்மபுரியில் வறட்சியால் மூடப்பட்ட பசுமைக் குடில்கள்

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளும், சாமந்தி, கனகாம்பரம், செண்டுமல்லி, பட்டன்ரோஸ், கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்களும் அதிக அளவு பயிரிடப்படுகின்றன. மாவட்டத்தில் பென்னாகரம், அக்ரஹாரம், இண்டூர், அதகப்பாடி, சோமனஅள்ளி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பழைய தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில், காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் நாற்றுக்கள் குழித்தட்டு முறையில் வளர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குழித்தட்டில் வளர்க்கப்பட்ட நாற்றுக்களை, விவசாயிகள் நடவு செய்வதன் மூலம் நேரமும், செலவும் மிச்சமாகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாற்று உற்பத்தி பண்ணைகள்  உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, பென்னாகரம் மெயின்ரோட்டில் உள்ள பல நாற்று உற்பத்தி பண்ணைகள் மூடப்பட்டு விட்டன. தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றினாலும், செடிகளை காப்பாற்ற முடியவில்லை. இதனால் ஏற்படும் அதிக செலவை சமாளிக்க முடியாமல், பண்ணை உரிமையாளர்கள் தற்காலிகமாக நாற்று உற்பத்தி பண்ணைகளை மூடி விட்டனர். இதனால், போதுமான நாற்றுகள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Greenhouses ,drought ,Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்