×

குளத்தூர் அருகே கோஷ்டி மோதல்

குளத்தூர், ஏப்.11:  வேப்பலோடை நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சைபெருமாள்(71), அவரது தம்பி பாண்டிராஜா(64). இவர்களது வீட்டு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றார். அவரிடம் சகோதரர்கள் இவ்வழியாக வாகனத்தில் செல்லக்கூடாது தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த வினோத்தின் தாயார் ஜெயகொடி, ஏன் தகராறு செய்கிறீர்கள் என கேட்டு பச்சைபெருமாள் வீட்டிலிருந்த அரிவாள்மனையை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பச்சைபெருமாள், பாண்டிராஜா, வினோத், ஜெயகொடி ஆகிய நான்கு பேருக்குள்ளும் ஏற்பட்ட மோதலில் நான்கு பேரும் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.  தகவலறிந்த தருவைகுளம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Clash of Clash ,Kuttur ,
× RELATED குளத்தூர் கிழக்கு கடற்கரைசாலையில்...