×

அதிமுகவை மோடியிடம் அடகு வைத்து விட்டனர்

திருச்செந்தூர், ஏப். 11: அதிமுகவை மோடியிடம் அடகு வைத்து விட்டனர் என்று திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டினார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் யாதவர் பெருமக்களின் சங்கமம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:வரும் மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். ராகுல்காந்தி பல்ேவறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். இத்திட்டம் விவசாயிகளுக்கு தான். நீட் தேர்வு ரத்து மூலம் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு எளிதாக இடம் கிடைக்கும். விவசாயக்கடன், கல்விக்கடன் ரத்து, ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் என பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். இது வரவேற்கதக்கது.
அதிமுகவை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லை. இப்ப இருக்கும் தலைவர்கள் குறுகிய காலத்தில் கட்சிக்கு வந்தவர்கள். நான் 1972 முதல் கட்சியில் இருக்கிறேன். இப்போது அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வழங்குகிறார்கள். அவர்கள் பணத்தை வைத்து தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் உள்ளனர். கட்சி தொண்டர்களை அழைப்பதில்லை. மக்களுக்கு ஒட்டுக்கு பணம் கொடுத்துவிட்டால் போதும் என அதிமுகவினர் நினைக்கின்றனர். அதிமுக கட்சியை மோடியிடம் அடகு வைத்துவிட்டனர். மோடி 84 நாட்கள் மட்டும் இந்தியாவில் இருந்துள்ளார் மற்ற நாட்கள் வெளிநாட்டில் இருந்துள்ளார்.

பாஜவின் 5 ஆண்டு ஆட்சியில் சாதனை ஒன்றுமில்லை. அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டதல்ல உருவாக்கப்பட்டது. இந்த அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை கூறிய டாக்டர் ராமதாஸ் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜக அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது, திராவிட இயக்கம் மக்கள் இயக்கம், இந்த இயக்கம் இல்லையென்றால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. திராவிட இயக்கத்தை காப்பாற்ற நாங்கள் இணைந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்த பாஜ நினைக்கிறது. தமிழ்நாட்டை பாதுகாக்க மத்தியில் சிறப்பான ஆட்சி தேவை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் முடியும். அண்ணா சொன்னது போல் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அவரது கனவு படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். எனவே தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திமுக ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, துரை, நெல்லையப்பன், கார்த்தி, கோபால், டெய்லர் ஆறுமுகம், நயினார், பாலகிருஷ்ணன், கணேசன், நம்பிராஜன், மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயந்திநாதன், பொருளாளர் நடராஜன், வழக்கறிஞர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சியோன் நகர் முத்துச் செல்வன் மற்றும் யாதவ மக்கள் உள்பட திரளானவர்கள் பங்ேகற்றனர்.

Tags : AIADMK ,Modi ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...