பாபநாசம் கோர்ட்டில் சமரச மைய விழிப்புணர்வு முகாம்

பாபநாசம், ஏப். 11:  பாபநாசம் கோர்ட்டில் சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாபநாசம் கோர்ட் நீதிபதி ராஜசேகர் பேசும்போது, சமரச மையத்தில் மனுதாரர்கள், எதிர் தரப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். வக்கீல்களும் பங்கேற்று உதவலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். சமரசம் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பினரும் எளிய முறையில் விரைவாகவும், பண விரயம் இல்லாமலும் முடிக்க வாய்ப்பு உள்ளது என்றார். முகாமில் பாபநாசம் வக்கீல் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன், வக்கீல்கள் கண்ணன், கம்பன், இளையராஜா, சங்கீதா, சதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் செய்திருந்தனர்.

Related Stories: