×

தஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை, ஏப். 11: தஞ்சை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து தஞ்சை கீழவாசல் பகுதியில் அமமுக துணை பொது செயலாளர் தினகரன் வாக்கு சேகரித்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: ஜி.கே.வாசன் வழிதவறி சென்றுவிட்டார். தஞ்சை மக்களவை தொகுதியில் அதிமுக நின்றிருக்க வேண்டும். தோல்வியடைந்து விடுவோம் என்று தமாகாவுக்கு சீட் கொடுத்து விட்டனர். நான் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என கடந்தாண்டே கூறிவிட்டேன். எங்கள் மண்ணில் வைரமே கிடைத்தாலும் வெட்டி எடுக்க விடமாட்டோம். தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிற துரோகத்தின் கூட்டணி மோடியின் கூட்டணி. மோடியை டாடி என்று சொல்வதால், டாடி கூட்டணியாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட விடாமல் தடுத்தவர்களுடன் தான் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார்.

பரிசு பெட்டகம் சின்னத்தை வாங்குவதற்கு பெரும் போராட்டத்தை போராடினோம், அதற்கு காரணம் மோடி. நம்மை சுயேச்சைகள் என கிண்டல் செய்கிறார்கள். சுயேச்சைகள் இப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுவது, இதுவரை இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. ஆர்.கே.,நகர் தேர்தலில் எப்படி அதிமுகவை புறமுதுகிட்டு ஓட செய்தோமோ அதேபோல நமது வேட்பாளர்கள் அதிக வாக்கு பெற வைத்து ஒரு மைல்கல்லாக மாற வேண்டும் என்றார்.

Tags : TDV Dinakaran ,Murugesan ,Tanugai Amma ,
× RELATED தரணி முருகேசன் இல்ல