×

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க குமரி கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன்

கன்னியாகுமரி, ஏப்.11:  கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல்படையும், இந்திய துணை கப்பல் படையும் இணைந்து கடலோர பகுதிகளில் மாதந்தோறும் சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். இதன்படி நேற்று காலை சஜாக் ஆபரேஷன் தொடங்கியது. கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் அதிநவீன ரோந்து படகில் கரையோர கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.   
இதுபோல் கடலின் உட்பகுதியில் இந்திய துணை கப்பல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  மேலும் கடலோர காவல் படைக்கு சொந்தமான 6 செக்போஸ்டுகளில் போலீசார் தொடர்ந்து வாகன ேசாதனை நடத்தினர்.

Tags : area ,Sajak Operation ,Kumari Sea ,terrorists ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...