×

காங். வேட்பாளருக்கு ஆதரவாக குளச்சலில் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பிரசாரம்

குளச்சல், ஏப்.11: கன்னியாகுமரி மக்களவை தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்.வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் வாக்குகள் கேட்டு பேசினார். இதில் மாவட்ட தலைவர் ஷாஜகான், செயலாளர் நசீம், பொருளாளர் முகம்மது சுபேர், மாநில பிரதிநிதி அப்துல் ரசீது, மாவட்ட துணைத்தலைவர் ஏ.என்.மீரான், நகர தலைவர் முகம்மது பலீல், செயலாளர் முகம்மது அனீபா, பொருளாளர் செய்னுல் ஆப்தீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அன்வர் சதாத், மாவட்ட காங். துணைத்தலைவர் முனாப், பொருளாளர் யூசுப்கான், நகர தலைவர் சந்திரசேகர், நகர தி.மு.க.பொறுப்பாளர் ரகீம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Muslim League ,candidate ,
× RELATED தண்ணீர் பந்தல் அமைக்க கட்சிகளுக்கு...