×

கரூர் மக்களவை தொகுதி கடவூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

கரூர், ஏப்.11: கரூர் மக்களவை தொகுதி கடவூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்தார். கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று கடவூர் ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டபோது பிரதமர் மோடி வரவில்லை. இப்போது ஓட்டுக்காக அடிக்கடி வருகிறார். அதிமுக ஆட்சியை விமர்சித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கின்றனர். ஊழல் அரசு என பாஜக அரசு சொன்னபின்னரும் சேர்ந்துள்ளனர். இது சந்தர்ப்பவாத கூட்டணி, நீட்தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் எம்பியாக இருந்த தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசினாரா?. அந்த மசோதா எங்கே இருக்கிறது என கண்டுபிடித்தாரா?. கஜாபுயலுக்கு நிதி தரவில்லை, வாதாடி பெற்றாரா?. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து செய்தது என்ன என மக்கள்கேட்கிறார்கள். இப்போதும் நீட்தேர்வில் இருந்து விலக்களிக்க தேர்தல் அறிக்கையில் பாஜக கூறவில்லை. அதிமுகவும்  கேட்கவில்லை. ஆனால் காங்கிரஸ்கட்சி நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிப்போம் என கூறியுள்ளது. மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் நீட்தேர்வில் இருந்து விலக்குஅளிக்கப்படும். ஏழை கிராமப்புற மாணவ மாணவியரின் மருத்துவக்கல்விக் கனவு நனவாகப்போகிறது. என்றார். உடன் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Tags : district ,Karur ,Jyothimani ,constituency ,Lok Sabha ,Congress ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...