×

இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் பிரசன்னபார்வதி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில், ஏப். 11: நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் பிரசன்னபார்வதி கோயில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. 9 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது. கொடியை ஊர்தலைவர் வக்கீல் உதயகுமார் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணன், முன்னாள் ஊர்தலைவர்கள் விஷ்ணுராம், பாலசுப்பிரமணியம் நிர்வாகிகள் ஸ்ரீகிருஷ்ணபெருமாள், அன்பழகன், பாலகிருஷ்ணன், பரசுராம், ராமகிருஷ்ணன், செல்வராஜ், தனபாலன், ராஜன்போஸ், கோகுலன், விஷ்ணுகுமார், சீனியப்பன், விஸ்வநாதன், பிரபாகரன், உதயசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 6.30க்கு 1008 திருவிளக்கு பூஜை, 7.30க்கு நகைச்சுவை திரைஇசைப்பட்டிமன்றம் நடந்தது. 11ம் தேதி காலை 5.30 மணிக்கு தேவார பஜனை, 6.30க்கு தீபாராதனை, 7 மணிக்கு முருக பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம், மாலை 5.30க்கு தேவார பஜனை, 7 மணிக்கு சிவதேவஸ்தான சிவா இளைஞர் நற்பணிமன்ற ஆண்டுவிழா ஆகியவை நடக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக திமுக நகர செயலாளர் மகேஷ், ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தினமும் பஜனை, தீபாராதனை, கலைநிகழ்ச்சிகள், சுவாமி பவனி வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
 19ம் தேதி காலை 8 மணிக்கு பாலாபிஷேகம், பகல் 12 மணிக்கு காவடி எடுத்தல், 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு நடக்கிறது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, விஜயகுமார் எம்பி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். விழா ஏற்பாடுகளை சிவதேஸ்தான நிர்வாககுழு தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் நிர்வாககுழு, செயற்குழு உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.

Tags : Krishna ,festival ,
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்