சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

சின்னசேலம், ஏப். 11: கல்வராயன்மலையில் இருந்து பொட்டியம் வழியாக கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல்  கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் அக்கராயபாளையம் ஊத்தோடைக்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பொட்டியம் பகுதியில் இருந்து வேகமாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்த அசோக்குமார், காந்தி, செந்தாமரை ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.  மேலும் லாரியில் 40 லாரி டியூப்களில் 1200 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினிலாரி மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, அசோக்குமார்(24), காந்தி(25) மற்றும் செந்தாமரை ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அசோக்குமார், காந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Tags : youths ,
× RELATED பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை