×

மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க நடவடிக்கை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கடலூர், ஏப். 11: நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட பணிகளும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளர் டாக்டர் சந்திரமோகன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்திட மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி ற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிளுக்கு சக்கர நாற்காலி, சாய்வுத்தளம் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும்.  வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவினை எய்திட அனைத்துத்துறை அலுவலர்களும் முழுமையாக பணியில் ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் சார் ஆட்சியர் சரயு, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகவன், நகராட்சி ஆணையாளர்கள் அரவிந்த் ஜோதி (கடலூர்), சுரேந்திரஷா (சிதம்பரம்), மாவட்ட சமூகநல அலுவலர் அன்பழகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், கடலூர் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.அதனை அடுத்து அவர் கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்புச்செல்வனுடன் இணைந்து கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழ்அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Tags : Electoral Spectator ,examination ,polling centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!