திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பேட்டி

திருவில்லிபுத்தூர், ஏப்.10: தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் திருவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
விவசாயம் செய்வது கஷ்டம் என விவசாயிகள், அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கினனர். இதனை மாற்றி அனைவரும் விரும்பி விவசாயம் செய்யும் நிலையை உருவாக்குவேன். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ஓராண்டிற்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவர்கள் வரை வேலைவாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும். திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ரயில்நிலையத்தில் இருந்து பஸ்நிலையம் வருவதற்கு சிரமமாக உள்ளது. சிவகாசியில் இருந்து வரும் பஸ்களையும், திருவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி பகுதிக்கு செல்லும் பஸ்களும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல சாலை அகலப்படுத்தப்படும். ரயில்நிலையத்திற்கு பஸ்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags : Dhanush M Kumar ,DMK ,Srivilliputhur ,
× RELATED சின்னமனூரில் காலை, மாலை நேரங்களில்...