×

சிவகாசி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் உறுதி

சிவகாசி, ஏப். 10: சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஆண்டியாபுரம், அனுப்பன்குளம், மயிலாடுத்துறை, பேராபட்டி, இந்திராகலனி, இராமலிங்காபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு நேற்று வாக்கு
சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அனுப்பன்குளம் பள்ளி தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் வெற்றி பெற்று நன்றி தெரிவிக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் வரும்போது, பள்ளியை தரம் உயர்த்தியதற்கான அரசு ஆணையை முதல்வரிடம் பெற்று வருவேன்.  சாத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமைப்படுத்தப்பட்டு ஆய்வு நிலையில் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஆய்வை முடித்து, சிவகாசி ஒன்றியப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்.

மேலும், கூட்டுக்குடிநீர் திட்டத்தை முழுமையாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். ரத்தினபுரம் மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பின்போது, சிவகாசி ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சிவகாசி ஒன்றிய மாணவர் அணிச்செயலாளர் ஆரோக்கியம், அனுப்பங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜபாண்டி மற்றும் புதிய தமிழகம், தேமுதிக, பாஜ. பாமக, ஜான்பாண்டியன் கட்சி, நடிகர் கார்த்திக் கட்சி, சேதுராமன் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajavarman ,union ,AIADMK ,Sivakasi ,
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...