×

அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை காங்கிரஸ் பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

தேனி, ஏப். 10: தேனி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிகளை மீறி நடப்பதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என தேனியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்தார். தேனியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துணை முதல்வரின் மகன் என்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்படும்போக்கு உள்ளது. பகீரங்கமாக டோக்கன் கொடுத்து பணம் பட்டுவாடா நடக்கிறது. தேர்தல் விதிமீறல் அதிகளவில் உள்ளது. இதுகுறிதது மாநில தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சென்னையில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினர் தேர்தல் விதிமீறி அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற வாகனங்களை காட்டிலும் கூடுதலாக போலி அனுமதி கடிதம் மூலம் வாகங்களை ஓட்டி வருகின்றனர். அதிமுகவினர் பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறும்போது, அவர் சாதாரணமாக ஒரு எம்பியாக மட்மின்றி முக்கிய பொறுப்பேற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவராக இருப்பார். அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அது அதானி, அம்பானி, நீரவ்மோடிக்கு வாக்களித்ததாக மாறிவிடும். நரேந்திமோடி போன்றவர்களுக்கே வாக்களித்ததாக மாறிவிடும். ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றார். அப்போது தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் உடனிருந்தார்.

Tags : Congress ,General Secretary ,Election Commission ,electorate ,
× RELATED ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் கடன்...