கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பிரசாரம்

கறம்பக்குடி, ஏப்.10:   கறம்பக்குடியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெற்கு ஒன்றியத்தில் உள்ள டி.கலபம், பல்லவராயன்பத்தை மற்றும் மழையூர் ஊராட்சியில் திருநாவுக்கரசர் வாக்குகள் கேட்டு கடை வீதியில் திறந்த வேனில் நின்று பேசினார். அப்போது தமிழகத்தில் மற்றும் மத்தியிலும் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும். ஏழை மக்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன். வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். விவசாய கடன் கல்வி கடன் முழுவதையும் ரத்து செய்வேன் என்று கூறி பிரதமர் பதவிக்கு வந்த மோடி இந்திய மக்களை, விவசாயிகளை ஏமாற்றி விட்டார். 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மட்டுமல்லாமல் ஜி.எஸ்டியை அமல்படுத்தியது மட்டுமே மோடியின் சாதனையாக விளங்குகிறது. தமிழகத்தில் ஆட்சி நடத்துகின்ற அதிமுக கட்சி 5 கோஷ்டிகளாக உள்ளது. எடப்பாடி கூட்டணி தேர்தலில் எடுபடாத கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறி கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிராச்சாரத்தில் புதுகை எம்எல்ஏ வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : constituency ,Trichy Lok Sabha ,Tirunelveli ,
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்