×

டூவீலர்கள் நிறுத்துமிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை

திருத்துறைப்பூண்டி, ஏப்.10: இருசக்கரவாகனங்கள் நிறுத்துமிடமாக திருத்துறைப்பூண்டி  பயணிகள் நிழலகமாக மாறியுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திமுக எம்எல்ஏ ஆடலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  வந்து ஒரு மாதத்திலேயே கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்தது.இந்நிலையில் நான்கு மாதத்திற்கு பிறகு பயணிகள் நிழலகம் சீரமைக்கும் பணி நேற்று முன் தினம் நிறைவு பெற்றது.இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த பயணிகள்நிழலகத்தில் பயணிகள் நின்று பேருந்து ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடியவிரைவில் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளது. தற்போது கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு பயணிகளுக்கு இடையூறாக நிழலகத்தில் இருசக்கர வாகனங்கள்அதிக அளவில் நிறுத்தி வைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பயணிகள் நிழலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,parking lot ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை