×

பொன்னமராவதியில் பாரித்திருவிழா

பொன்னமராவதி, ஏப்.10: பொன்னமராவதி பகுதியில் புலிக்கூத்து என்ற பாரித்திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள மரவாமதுரை பெரிய கண்மாய் கரையில் உள்ள ஒலியநாயகி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து நடத்தும் பாரித்திருவிழா என்ற புலிக்கூத்து நடந்தது. சங்கம்பட்டி மற்றும் ஈச்சம்பட்டியில் இருந்து குதிரையில் சுவாமி ஆடி முன்னே செல்ல இதன் பின்னே பல்வேறு வேடமிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  ஊர்வலமாக சென்று மரவாமதுரை பெரிய கண்மாய்க்கரையில் உள்ள ஒலியநாயகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர். இதேபோல அம்மன்குறிச்சி புலிவேடமிட்டும், குதிரை மற்றும் பல்வேறு வேடங்கள் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். கல்லம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் பாரித்திருவிழா நடைபெற்றது.

Tags : Ponnaravarai ,
× RELATED உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி...