×

கள்ளக்குறிச்சி, அயோத்தியாபட்டணம் பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் கள்ளக்குறிச்சி அமமுக வேட்பாளர் வாக்குறுதி

கள்ளக்குறிச்சி,ஏப்.10:  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ கோமுகிமணியன் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றிய பகுதியான உடையாம்பட்டி, அதிகாரிப்பட்டி, சின்னூர், வீராணம், வளையகாரனூர், பெருமாபாளையம், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, மேட்டுப்டடிதாதனூர், சுக்கம்பட்டி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி உள்பட 30 கிராமங்களிலும் அயோத்தியாபட்டணம் பேரூராட்சி பகுதியிலும் திறந்த வேனில் நின்றபடி பரிசுப்பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் கோமுகிமணியன் பேசுகையில் அயோத்தியாபட்டணம் பகுதியில் நீண்ட நாட்களாக உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட துரித நடவடிக்கை எடுப்பேன் எனவே என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என வாக்காளர்களிடம் கேட்டு கொண்டார்.

அயோத்தியாபட்டணம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மஞ்சூள்ராஜி, ஒன்றிய பேரவை செயலாளர் குமார், பேரூர் கழக செயலாளர் முருகன், ஓட்டுநர் அணி பொருளாளர் சுப்ரமணியன், ஒன்றிய இணை செயலாளர் கோபால், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சின்னதம்பி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி வசந்தி, மாவட்ட பேரவை பொருளாளர் சிவக்குமார், மாவட்ட பாசறை துணை செயலாளர் பச்சையப்பன், ஊராட்சி பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மணிகண்டன், அருள்மணி, மகாலிங்கம், செல்வகண்ணு, முருகன், பழனிசாமி, சக்திவேல், சசி, ராஜேந்திரன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags : candidate ,Kallakurichi Ammukh ,Kallakurichi ,Ayothyavattam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த...