×

மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கான எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

அரூர், ஏப்.10: 5ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த, பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை என, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரூரில் நடந்த ெபாதுக்கூட்டத்தில் ேபசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், அரூர் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து, அரூர் ரவுண்டாணா அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மல்லிகா வரவேற்றார்.
இதில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: தற்போது 17வது நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. மோடி மீண்டும் ஆட்சிக்குவந்தால் 18வது நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடியாது. சரவதிகார ஆட்சியாக மாறிவிடும். அம்பேத்கார் உருவாக்கிய சட்டத்தை காலில் போட்டுமிதிக்கிற அரசாகத்தான் உள்ளது. எனவே மோடியை வீட்டிற்கு  அனுப்ப வேண்டும். அதேபோல், தமிழகத்தில் ஊழல் அடிமை எடப்பாடி பழனிசாமியையும் வீட்டிற்கு அனுப்பும் நாள் வந்துவிட்டது.

திமுக தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இதேபோல், கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கடந்த 5ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த, பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடந்த 5ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி எதையும் செய்யவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் அன்புமணி தான் தமிழகத்தின் முதல்வர், அவர் முதல்கையெழுத்து மதுவை ஒழிக்க போடமுடியாது. பாக்கோட விற்கத்தான் கையெழுத்து போடமுடியும். எனவே, தமிழகத்திலும், மத்தியில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், அரூர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கும், தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரையும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

Tags : K.Balakrishnan ,CPM ,Modi ,
× RELATED ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை...