×

முலாம்பழம் கிலோ ₹25க்கு விற்பனை

தர்மபுரி, ஏப்.10: கோடை வெயில் கொளுத்துவதால், உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் வரத்து மற்று பொதுமக்களிடையே நுகர்வும் அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து தர்மபுரி சந்தைப்பேட்டை மார்க்கெட்டிற்கு முலாம்பழம் அதிகரித்துள்ளது. இதனால், விலையும் சரிந்துள்ளது. கிலோ ₹25 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து சந்தைப்பேட்டை வியாபாரிகள் கூறுகையில், வெயில் சுட்டெரித்து வருவதால், கடைகளில் முலாம்பழம் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், பழங்களை மொத்தமாக வாங்கிச் சென்று மக்களும் தங்களது வீடுகளில் ஜூஸ் தயாரித்து குடிக்கின்றனர் என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா