×

கல்லூரி மாணவி கடத்தல்

திருக்கோவிலூர், ஏப். 10: திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராஜப்பிரியா (19). விழுப்புரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தேவனூர் கூட்ரோடு அருகே வந்தபோது, வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் லட்சுமணன், தவிடன் மகள் கனினா உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசாமி நேற்று அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவி ராஜப்பிரியாவையும், அவரை கடத்தி சென்ற லட்சுமணன் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர்.

Tags : College student kidnapping ,
× RELATED கல்லூரி மாணவி கடத்தல்