×

சங்கராபுரத்தில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சங்கராபுரம், ஏப். 10: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி சங்கராபுரம் நகரத்தில் உள்ள 15 வார்டுகளில் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னை வெற்றிபெற செய்தால் சங்கராபுரத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசு சட்டக்கல்லூரி அமைப்பேன். சங்கராபுரம் நகரத்தில் உள்ள குடிதண்ணீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தயாளமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர அவைத்தலைவர் குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரசை இளஞ்செழியன், நிர்வாகிகள் செங்குட்டுவன், முருகன், ஜாகீர், ஜோதி, பொன்கோவிந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகர், தயாளன், சாகுல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தலித்சந்திரன், திராவிடச்சந்திரன், ஜானகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : Durga ,candidate ,polling ,Sankarapuram ,Vellore ,
× RELATED செங்குன்றத்தில் துர்கை அம்மன்...