×

அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள்

காரைக்குடி, ஏப். 10: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி வாயிலாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார். இளநிலைப்பிரிவில் பி.ஏ (வரலாறு), பி.பி.ஏ, பி.பி.ஏ (நேரடி இரண்டாம் ஆண்டு) பி.ஏ (ஆங்கிலம்) பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுநிலைப் பிரிவில் ஏம்.ஏ (ஆங்கிலம், வரலாறு) எம்.எஸ்சி (தாவரவியல், கணினி அறிவியல், கணிதம்) எம்.காம் (நிதி மற்றும் கட்டுப்பாடு) எம்.சி.ஏ, எம்.சி.ஏ (நேரடி இரண்டாம் ஆண்டு) எம்.பி.ஏ (நிறும மேலாண்மை, திட்ட மேலாண்மை, உற்பத்தி மற்றும் திட்ட மேலாண்மை, வங்கியியல் மற்றும் நிதி, மனிதவள மேலாண்மை) எம்.பி.ஏ (பொது). பிஜி டிப்ளமோ பிரிவில் பிஜி டி.பி.எம், சான்றிதழ் பிரிவில் சி.எல்.ஐ.எஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் w.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்று ண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் தாள் ஒன்றுக்கு ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற நாளிலிருந்து 10 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டிற்கு பாடம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் டிடி எடுத்து விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறாமல் நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.600 வீதம் வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்கலாம். விடைத்தாள், மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய தொகைக்கான வரைவோலையுடன் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயரில் காரைக்குடியில் செல்லத்தக்க வகையில் தேர்வு பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Tags : Faculty ,
× RELATED சோகத்தில் மூழ்கிய மேல்மருவத்தூர்:...