×

தபால் ஓட்டு விண்ணப்பம் பெற்ற முன்னாள் ராணுவத்தினர்

ராமநாதபுரம், ஏப்.10: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக முன்னாள் ராணுவத்தினர் 217 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான தபால் வாக்கு பதிவிற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1916 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு பணிக்காக போலீசார், ஊர்காவல் படையினர். முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,413 முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் வங்கி, அரசு அலுவலகங்களில் பணி புரிகின்றனர். 70 வயதை கடந்த நிலையில் 400பேர் உள்ளனர். தேர்தல் பணிகளுக்கு 65 வயதிற்கு குறைந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற நிலையில் தேர்தல் பணி செய்ய வருமாறு செல்போன் மூலமாக தகவல்கள் அனுப்பட்டது. 217 பேர் தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் 17,18,19 மூன்று தினங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி செய்வார்கள், 16ம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாக்குசாவடி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.750 வீதம் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணை இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில். பாராளுமன்ற தேர்தல் பணிக்காக 300 முன்னாள் ராணுவவீரர்கள் அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்தனர். 500 பேருக்கு மேல் தகவல் அனுப்பட்டது. தற்போது 217 பேர் வந்துள்ளனர். கடந்த 2014 தேர்தலில் 190 முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்தல் பணி செய்தனர். வாக்கு சாவடியில் வாக்காளர்களை வரிசையாக நிற்க, ஒழுங்கு படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பெறுவதற்காக முன்னாள் ராணுவத்தினர் வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் முன்னாள் ராணுவத்தினர் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்றார்.

Tags : soldiers ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை