×

பழநி கோயிலில் வருடாபிஷேகம் சிறப்பு யாகம் நடந்தது

பழநி, ஏப். 10: பழநி, ஏப்.10: பழநி கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர தினமான நேற்று வருடாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசத்தை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசம் கோயிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின், உச்சிகால பூஜையின்போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோல் பழநி கோயிலின் உபகோயில்களான ஸ்ரீ வன துர்க்கையம்மன் கோயில், ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில், ஸ்ரீ காசலை விநாயகர், ஸ்ரீ உத்திர விநாகர், ஸ்ரீ அபரஞ்சி விநாயகர் கோயிலிகளிலும் வருடாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Annapatheesham ,yagam ,Palani ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து