×

தேர்தல் எதிரொலி டாஸ்மாக்கிற்கு 3 நாள் லீவ் கலெக்டர் அறிவிப்பு

பழநி, ஏப். 10: நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுமென கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரங்களில் அசாம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எம்எல் 1 டாஸமாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணந்த மதுக்கூடங்கள் மற்றும் எம்எல் 2 முதல் எப்எல் 11 வரையிலான (எப்எல் 6 தவிர) அனைத்து மதுவிற்பனை தலங்களும் 16ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு தினமாக 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். அதுபோல் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23ம் தேதியும் மூடப்பட்டிருக்கும்.  அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. அன்றைய நாட்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : election ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...