×

நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் திறன்மிகு தையல் தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறுவனங்களில் கிராக்கி

திருப்பூர், ஏப். 10: பின்னலாடை உலக சந்தையில் ஆடைகளின் விலை குறைந்து வருவதால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், ஜாப்-ஒர்க் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மேலும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.பருத்தி ஆடைகளுக்கு உலக அளவில் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும்பாலும் பருத்தி ஆடைகளையே அதிகளவு தயாரிக்கின்றனர்.அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உட்பட நுாற்றுக்கணக்கான நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால்  திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடந்த ஆண்டு ரூ.24 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் கட்டிங், ஸ்டிச்சிங், ஓவர்லாக், பேட்லாக், ரிப்-கட்டிங், போல்டிங் ஆகிய வேலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. பின்னலாடை நிறுவனங்களில் இந்த நுணுக்கமான வேலைகளுக்கு தமிழக தொழிலாளர்களை மட்டுமே வைத்துள்ளனர். அயனிங், பண்டல் போட, மூடை சுமக்க, டிரை வாஷ், சாய ஆலைகள், பிளீச்சிங், பிரிண்டிங் உட்பட ரப் வேலைகளுக்கு மட்டுமே வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் உட்பட 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களிலிருந்து ஆண், பெண் தொழிலாளர்களை அழைத்து வந்தனர்.

காலப்போக்கில் பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை குறைத்துக்கொண்டனர். வடமாநில தொழிலாளர்களை இந்தபணிகளில் ஈடுபடுத்தினால், குறைபாடுகள் அதிகரித்தது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் அடிக்கடி விடுமுறையில் சொந்த மாநிலங்களுக்கு செல்வது, வேறு நிறுவனங்களுக்கு செல்வது, நுணுக்கமான வேலைகளை கற்க ஆர்வம் காட்ட தவறுவது உட்பட பல்வேறு காரணங்களால் கார்பரேட் பின்னலாடை நிறுவனங்களில் எதிர்பார்த்த உற்பத்தியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் விதமாக தொழிலாளர்கள் நிறைந்த புறநகர் பகுதிகளில் பவர்-டேபிள் யூனிட்டுகளை துவங்கினர். இந்த யூனிட்டுகளுக்கு அனைத்து தையல் மெஷின்களில் வேலை தெரிந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை யூனிட் இன்சார்ச்சாக நியமிக்கின்றனர். இந்நிறுவனங்களை நிர்வகிக்க அனைத்து தையல் மெஷின்களையும் இயக்கும் திறமை மிக்க தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Tags : knitting companies ,
× RELATED கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு...