×

மஞ்சூர் மற்றும் ஊட்டியில் நாளை ஆ.ராசா பிரசாரம்

ஊட்டி,  ஏப்.10: நீலகிரி மக்களவை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்  ராசா நாளை 11ம் தேதி ஊட்டி தெற்கு ஒன்றித்திற்குட்பட்ட பகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் முபராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  நீலகிரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ராசா 11ம் தேதி (நாளை) வியாழக்கிழமை ஊட்டி தெற்கு  ஒன்றியத்திற்குட்பட்ட நுந்தாளாவில் காலை 10 மணிக்கும், தொடர்ந்து, காத்தாடி  மட்டம், பெங்கால்மட்டம், பகல் 12 மணிக்கு மஞ்சூரிலும் பிரசாரம்  மேற்கொள்கிறார். தொடர்ந்து, மேலூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகல் 12 மணிக்கு  ஆறுகுச்சி, தூதூர்மட்டம், கொலகம்பை, கொலகம்பை, அதிகரட்டி, கேத்தி பாலாடா,  எல்லநள்ளி பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். ஊட்டி நகரில் பிற்பகல்  மணிக்கு நொண்டிமேடு பகுதியில் பிரசாரத்தை துவக்குகிறார். தொடர்ந்து, 4  மணிக்கு ஊட்டி மார்க்கெட், ஐந்துலாந்தர், மஞ்சனக்கொரை, அண்ணாகாலனி, மாலை  6.30 மணிக்கு காந்தல் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதில், திமுக.,  நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு  முபாரக் கூறியுள்ளார்.

Tags : Manjur ,Udaya ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...