ஊட்டியில் தான் படித்த பள்ளியை பார்வையிட்ட இங்கிலாந்து சுற்றுலா பயணி

ஊட்டி, ஏப்.10: இங்கிலாந்தை சேர்ந்தவர் பீட்டர் ஹேலி என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1959ம் ஆண்டு ஊட்டியில் விடுதியில் தங்கி இங்குள்ள பிரீக்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளார். படிப்பு முடிந்தவுடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் இந்தியாவில் படித்த அனுபவங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக பீட்டர் ஹேலி தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்துள்ளார். ஊட்டி வந்த பீட்டர் ஹெலி அவர் படித்த பிரீக்ஸ் பள்ளிக்கு சென்று தனது பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், தான் படித்த போது பள்ளி எவ்வாறு அழகாக இருந்ததோ அதேபோல் தற்போது உள்ளதை கண்டு வியப்படைந்தார். தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பின்னர் குன்னூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

× RELATED ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி