×

சமரா மையத்தில் கட்டணம் இல்லாமல் குடும்ப வழக்குகளுக்கு தீர்வு காணலாம்

ஊட்டி, ஏப். 10: சமரச  மையத்தில் குடும்ப வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள்  அனைத்தையும் கட்டணம் இல்லாமல் எளிதாக முடித்து கொள்ளலாம் என  நீலகிரி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.  ஊட்டியில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் 14ம் ஆண்டு சமரச மையம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில்,  நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி., சண்முகப்பிரியா,  மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆகியார் முன்னிலை வகித்தனர். மாவட்ட  நீதிபதி வடமலை தலைமை வகித்து சமரச மைய நிர்வாகிகளுக்கு பேட்ஜ்  வழங்கி பேசியதாவது: உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட  நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ள  வழக்குகளை சமரச மையத்தில் பொதுமக்கள் அல்லது  வக்கீல் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம்.  சமரச மையத்தில் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தீர்வுகளை ஊக்கப்படுத்துகிறது.

உறவுகள் ேமம்பட  வழி வகை ெசய்கிறது. பயிற்சி பெற்ற சமரசர்களாக மூத்த வக்கீல்கள் 11 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 40 மணி ேநரம் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது. பயற்சி பெற்ற சமரசகர்கள் பேச்சு  நடத்தி உகந்த தீர்வுகளை எட்டுவதால் மேல்முறையீடு  தேவையில்லை. செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகிறது.  சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருள் செலவும் மீதப்படுகின்றன.  இவற்றின் பயன்பாடுகள் நமது குடும்பத்திற்காகவும், சமூக  செயல்பாட்டிற்காகவும் அமைகின்றன. சமரசத்தில், நேரடியான பேச்சு வார்த்தைகள்  மனித உறவுகளையும், சமூக உறவுகளையும் மேம்படுத்துகின்றன. இரு தரப்பினர்களின்  தேவைகளை ஒட்டிய தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதால் மன நிறைவு ஏற்படுகிறது.

 மேலும், இங்கு அதிகபட்சமாக 60 முதல் 90 நாட்களில்  பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்த முடிவுகள் நீதிமன்ற தீர்ப்பாகவும்  அறிவிக்கப்படாது. நீதிமன்ற கட்டணம் மீண்டும் திரும்ப வழங்கப்படும். இங்கு  தீர்வு கிடைக்கவில்லை எனில், மீண்டும் நீதிமன்றங்களில் வழக்காக நடத்தலாம்.  சமரசத்தின் போது பேசப்பட்ட, எழுதப்பட்ட முடிவுகள் ஏதும் இங்கு  சமர்பிக்கப்படமாட்டாது. எனவே, பொதுமக்கள் இந்த கட்டணமில்லா சமரச மையத்தை  பயன்படுத்தி தங்களது குடும்பம் மற்றும் சிவில் வழக்குகளை எளிதாக முடித்துக்  கொள்ளலாம், என்றார்.விழாவில், நீதிபதி சுரேஷ், வக்கீல்கள் சங்க  நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : Samara Center ,
× RELATED சமரா மையத்தில் கட்டணம் இல்லாமல் குடும்ப வழக்குகளுக்கு தீர்வு காணலாம்