×

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் 14வது இடம்

கோவை, ஏப். 10: தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தர வரிசை பட்டியலை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 8ம் தேதி புதுடெல்லியில் வெளியிட்டார். இதில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல் நிறுவனங்கள், மருந்தியல் கல்லூரிகள், சட்ட கல்லூரிகள் ஆகிய பிரிவுகளின் கீழ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தரவரிசையில் தேசிய அளவில் 14வது இடத்தை பிடித்துள்ளது.

கல்வி நிறுவனங்களின் கற்பித்தல், கற்றல், கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், வேலைவாய்ப்புகள் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், மாநில கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் பாரதியார் பல்கலைக்கழகம் சிறந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ஜெயக்குமார், திருநாவுக்கரசு, பதிவாளர் (பொ) முருகன், என்ஐஆர்எப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை தேவி ஆகியோர் தேசிய அளவில் பல்கலைக்கழகம் 14வது இடம் பிடித்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags : Bharathiar University ,
× RELATED கோவை பாரதியார் பல்கலை சார்பில்...