×

மாணவர் கல்விக்கடன் ரத்து அன்னுாரில் ராசா பிரசாரம்

அன்னுார், ஏப்.10: திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பயிர் கடன்கள் ரத்து செய்யப்படும், சமையல் கேஸ் பழைய விலைக்கே வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் , காங்கிரஸ் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, அன்னூர் சவுந்தரராஜன், திமுக ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னூர் நடராஜன், சத்தியமூர்த்தி, துளசியம்மாள், ராஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுகவினர், கொமதேக., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Raja ,Annur ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!