×

டிபார்ட்மென்ட் ஸ்டோர் பூட்டை உடைத்து திருட்டு

ஈரோடு, ஏப். 10:  ஈரோடு அருகே திண்டல் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (47). இவரது மனைவி சசிரேகா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஸ்வநாதன் ஈரோடு அருகே பழையபாளையம் இந்திராகாந்தி வீதியில் தம்பதியினர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோரை கடந்து செல்லும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கடையின் உரிமையாளர் விஸ்வநாதனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து கடைக்கு வந்த விஸ்வநாதன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : store store loot break ,
× RELATED குடிபோதையில் தீக்குளித்து பெயிண்டர் பலி