×

ஒரத்தநாடு அருகே சாலையோர புதரில் வாலிபர் சடலம் கொலையா? போலீஸ் விசாரணை

ஒரத்தநாடு, ஏப். 10: ஒரத்தநாடு அருகே சாலையோர புதரில் வாலிபர் சடலம் கிடந்தது. இவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிகாஸ்லோகோ (25). இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள ஓட்டலில் பாஸ்ட்புட் சமையலராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்க்க பைக்கில் செவ்வாய்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் ரோட்டோரத்தில் இருந்த மரக்கிளைகள் கிடந்த புதரில் இறந்து கிடந்தார். அருகே அவரது பைக்கும் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிகாஸ்லோகோ உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்தவுடன் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும்.Tags : roadside bush ,investigation ,Orathadana Police ,
× RELATED பெண் அடித்து கொலை?: போலீசார் விசாரணை